கண்ணப்பா.. இந்த தலைமுறைக்கு ஒரு உண்மையான வரப்பிரசாதம்
விஷ்ணு மஞ்சுவின் லட்சியத் திரைப்படமான கண்ணப்பா, ஜூன் 27 நேற்று திரைக்கு வந்தது.
முகேஷ் குமார் சிங் இயக்கிய இந்தப் புராண திரைப்படத்தை அவரது தந்தையும் புகழ்பெற்ற நடிகருமான மோகன் பாபு தயாரித்துள்ளார்.
இப்படத்தில் மகாதேவ சாஸ்திரியாக மோகன் பாபு, நாதநாடுடாக சரத்குமார், பன்னக வேடத்தில் மது, கம்படு வேடத்தில் முகேஷ் ரிஷி, கவ்வராஜுவாக பிரம்மாஜி, வீரய்யாவாக கருணாஸ், பிலகாக பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கிராதாவாக நடித்துள்ளார், பிரபாஸ் ருத்ரனாக நடித்திருக்கிறார்.
அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் சிவன் மற்றும் பார்வதி தேவியாக நடிக்கிறார்கள்.
கண்ணப்பா திரைப்படம், ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள சைவ சித்தாந்த பள்ளியைச் சேர்ந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு துறவியின் புராணக் கதையைச் பற்றி எழுதப்பட்டுள்ளது.
சிவபெருமானின் தீவிர பக்தரான கண்ணப்பா, பக்தியால் தன் கண்களையே இறைவனுக்கு அர்ப்பணித்த கதை, பெரும்பாலான தென்னிந்தியர்களுக்கு நன்கு தெரிந்த கதை.
திண்ணாடு (விஷ்ணு மஞ்சு) ஒரு கடுமையான போர்வீரன், அவன் சிலைகளில் தெய்வீகத்தைக் காணவில்லை – கல்லாக மட்டுமே காண்கிறான். கடவுள் நம்பிக்கையற்றவன், சடங்குகளை நிராகரித்து, தனது பழங்குடியினரின் பழக்கவழக்கங்களை கேலி செய்கிறான்.
கைலாசத்தின் வான் உலகில், சிவபெருமான் (அக்ஷய் குமார்) மற்றும் பார்வதி தேவி (காஜல் அகர்வால்) திண்ணாவின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.
திண்ணாவின் விதியை முன்னறிவித்த சிவன், இந்த நபர் தனது மிகவும் பக்தியுள்ள சீடர்களில் ஒருவராக மாற விதிக்கப்பட்டிருப்பதை கூறுகிறார்.
பழங்குடித் தலைவரின் (சரத்குமார்) மகனான திண்ணாடு, சிறுவயதில் கடவுளுக்காக பளிகொடுக்கும் தன் நண்பனனின் சாவால் கடவுள்மேல் வெறுப்பை கொடுகிறது அதனால் தன் தந்தையாலே சமூகத்திலிருந்து நாடுகடத்தப்படுகிறார்.
அண்டை பழங்குடியினரின் இளவரசியான நேமாலி (ப்ரீத்தி முகுந்தன்) மீது காதல் கொண்ட பிறகு, பழங்குடியினருக்குள் பகை மூள்கிறது .கடவுளை வெறுக்கும் கண்ணப்பா கண்களில் ரதம் வழியும் Siva பெருமான் சிலைக்கு தன் கண்களை பிடுங்கி வைக்கும் அளவிற்கு எப்படி Siva பக்தனாக மாறுகிறார் என்பதே கண்ணப்பா கதை.
விஷ்ணு மஞ்சு கண்ணப்பாவின் உச்சக்கட்ட காட்சிகளில் தனது வெறிதனமான நடிப்பால் பார்வையாளர்களை திகைக்க வைத்துள்ளார், கடவுளை வெறுக்கும் காட்சிகளிலும், பக்தி பெருகும் காட்சிகளிலும் இரண்டும் Character..ரிலும் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார் விஷ்ணு.
இறுதி தருணங்களில் அவரது உணர்ச்சி மிக்க நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது. CAMEO ROLE…நடித்திருந்தாலும் மோகன்லால் நடிப்பு முதிர்ச்சியின் நெகிழ்ச்சி, பிரபாஸ் நடிப்பு பற்றி சொல்ல தேவையில்லை நமக்கே தெரியும்.
அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பு செயற்கை. சரத்குமார் தந்தை வேடத்திற்கு கன கச்சிதம் . செல்டன் ஷா ஒளிப்பதிவு பிரமிப்பு தருகிறது.
கிராபிக்ஸ் காட்சிகளும் மிரட்டல். ஸ்டீபன் தேவாசி இசை ஓகே..இன்னு சொல்லலாம். பாடல் மனதை தொடவில்லை. கதை..இக்கு ஏற்றார் போல் அனைத்து நடிகர்களின் நடிப்பும் அருமை.கண்ணப்பா படம் உணர்வுகளில் மட்டும்அல்ல வசூலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணப்பா வெறும் படம் மட்டுமல்ல – பக்தி, தியாகம் மற்றும் தெய்வீக அன்பைக் கொண்டாடும் ஒரு மறக்க முடியாத சினிமா யாத்திரை.
பண்டைய புராணங்களில் வேரூன்றி, கம்பீரமான காட்சிகளுடன் உயிர்ப்பிக்கப்பட்ட இந்தப் படம், நவீன இந்திய சினிமாவின் மிகச்சிறந்த புராண மறுபரிசீலனைகளில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. கண்ணப்பா மறந்து போன புராணத்தின் மறுபதிப்பு.