கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவம் கருட வாகனம்
கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் கருட வாகனத்தில் ஸ்ரீலஷ்மிபதி வீதி உலா. திரளான பக்தா்கள் தாிசனம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கல்லிடைகுறிச்சியில் கிபி 16 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மிகப்பழமையான ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் ஆதிவராகர் பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
உற்சவராக ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமிபதி அருள்பாலிக்கின்றார். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள வராக தீர்த்தக் கட்டத்தில் இருந்து தினமும் சுவாமிக்கு தீர்த்தம் எடுத்து வந்து திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பு. இத்திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன.
சிறப்பாக சித்திரை பிரம்மோற்சவம் 10 தினங்கள் வைகானச ஆகம முறைப்படி நடைபெறுகின்றது. இச்த ஆண்டுக்காண சித்திரை பிரம்மோற்சவ ககொடியேற்றம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. அதனை தொடா்ந்து தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகின்றது.
விழாவில் 5ம் நாளான இன்று இரவு ஸ்ரீ லட்சுமிபதி பொிய திருவடியான கருட வாகனத்தல் வண்ணமலா்மாலைகள் ஆபரணங்கள் சாற்றி சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளி மக்களுக்கு சேவை சாதித்தாா். சாயரட்சை பூஜை முடிவடைந்ததும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதனை தொடா்நது ஏழுந்தருளிய சுவாமிக்கு குடைவரை வாயில் தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடா்ந்து ஊா் மக்கள் சாா்பில் புது வஸ்திரம் சுவாமிக்கு சமா்பிக்கப்பட்டது.
திருக்கோவில் வாசலில் பலவண்ணகுடைகள் அணிவித்து வீதி புறப்பாடு நடைபெற்றது. பக்தா்கள் தேங்காய் உடைத்தும் பழங்கள் நைவேத்யம் செய்தும் பெருமாளை வழிபட்டனா். விழாவின் சிகர நிகழ்வான தோ் திருவிழா வருகின்ற 11ம் தேதி நடைபெறுகின்றது.