ஐஸ்வர்யா ரகுபதி ஆடை குறித்து கமெண்ட் செய்த பத்திரிகையாளர்
டி2 மீடியா நிறுவனம் தயாரிக்கும் ‘அம்பி’ படத்தில் ரோபோ சங்கர் முதல் முறையாக ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இப்படத்தை பாஸர் ஜே.எல்வின் இயக்குகிறார். ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் Pre Event நிகழ்ச்சியை ஐஸ்வர்யா ரகுபதி தொகுத்து வழங்கினார் அப்பொழுது அவரின் ஆடை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியது தவறு என்று அவருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ரகுபதி நிகழ்ச்சிகளை மட்டும் அல்ல சில படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் மாலை போட்டபோது கோபமாக தூக்கி வீசினார்.
இப்போது Sleeveless பிளவுஸ் போட்டதற்கு பத்திரிக்கையாளர் ஒருவர் வெயிலுக்கு இதமாக ஆடை அணிந்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்ப படத்தின் டாபிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்கிறீர்கள் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை …இன்னு கோபமாக முறைத்தார்.
இமான் அண்ணாச்சி ஆமான்னு தைரியமா சொல்லு புள்ள ஏன் மௌனமாக இருக்கிற அப்படின்னு கேட்க. என்னை சுற்றி கேமரா மீடியாக்களும் இருப்பதால் நான் அமைதியாக இருக்கிறேன் என்று கூறினார்.
ஐஸ்வர்யா ரகுபதி…யின் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் Viral…ஆகி பத்திரிக்கையாளருக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது.