கும்பகோணம் பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் JOB FAIR தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
கும்பகோணத்தில் மிட் டவுன் ரோட்டரி சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம், கிழக்கு ரோட்டரி சங்கம், ஜெனரல் ரோட்டரி சங்கம், சக்தி ரோட்டரி சங்கம், கிங்ஸ் ரவுடி சங்கம், பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் JOB FAIR என்ற தலைப்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் சரஸ்வதி பாடசாலை பள்ளியில் JOB FAIR மாவட்ட தலைவர் செந்தில், தலைமையில் நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமையாசிரியர் லதா அம்பலவாணன், மாவட்ட ஆளுநர்கள் லியோன், ஜெயக்குமார், ஸ்பெஷல் ப்ராஜெக்ட் மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன், JOB FAIR மாவட்ட துணைத் தலைவர் அறிவழகன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் லட்சுமி காந்தன், பகுருதீன் அலி அகமது, விஜயலட்சுமி, ராஜா மற்றும் ரோட்டரி சங்க இந்நாள் மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த JOB FAIR வேலை முகாமில் 65 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து கல்லூரி படிப்பபை முடித்தவர்கள் மட்டுமின்றி, பொறியியல்/ தொழில்நுட்பத்தில் (BE/B.Tech) படித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், ஐடிஐ தொழில் படிப்பை முடித்தவர்கள், டிகிரி முடித்தவர்கள், பார்மசி மற்றும் துணை மருத்துவப் படிப்புகளை படித்தவர்களும் என 500க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


