பழனி மாரியம்மன் கோவிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் தீ சட்டி, எடுத்து வழிபாடு
பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஓம் சக்தி, பராசக்தி என கோசமிட்டு வழிபாடு செய்தனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உப கோவிலான கோவிலில் மாசி திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று முக்கிய நிகழ்ச்சியான திரு தேரோட்டமானது நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த பாலக் கும்ப குருமணி ஆதினம் தலைமையில் பழனிக்கு வருகை தந்து உலக நலன் வேண்டி காலையில் யாகம் செய்தனர்.

இன்று மாலை பழனி மாரியம்மன் கோவிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் தீ சட்டி, எடுத்து வழிபாடு செய்தனர்.
ஓம் சக்தி பராசக்தி என கோசங்களை எழுப்பியவாறு மாரியம்மன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

