in

ஜனநாயகன்… பகவத் கேசரி ரீமேக் இல்லையாம்

ஜனநாயகன்… பகவத் கேசரி ரீமேக் இல்லையாம்

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கு படமான பகவத் கேசரி என்ற படத்தின் ரீமேக் என்ற டவுட் எல்லோரிடமும் நிலவிவரும் நிலையில் அதற்கான பதில் தற்போது கிடைத்திருக்கிறது.

H.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல்,கௌதம் வாசுமேனன், பிரியாமணி, மமீதா நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை KVN Production தயாரித்து வருகிறது.

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவத் கேசரி என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. ஆனால் அப்படத்தின் ஒரு காட்சி விஜய்யை இம்ப்ரஸ் செய்ததால் அந்த காட்சியை ஜனநாயகன் படத்தில் இடம்பெற வேண்டும் என்று படத்தின் உரிமையை 4.5 கோடி ரூபாய் பட குழுவினர் வாங்கி இருக்கின்றனர்.

பகவத் கேசரி படத்தில் வரும் குட் டச் Bad டச் காட்சியை விஜய் ஜனநாயகன் படத்தில் வைக்க சொல்லியிருகிறாராம் இந்த ஒரே ஒரு காட்சி தவிர பகவத் கேசரி படத்திற்கும் ஜனநாயகன் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்.

What do you think?

ரவி..க்கு அதரவா பேச எவ்வளோ வாங்கினிங்க.. சுசித்ராவை வறுத்தெடுக்கும் நெடிசன்கள்

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு