in

ஏப்ரல் இறுதி வாரத்தில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் விஜய் போட்ட பிளான் எல்லாம் சொதப்பல்? உண்மையான காரணம்!

Watch – YouTube Click

தளபதி விஜய் அரசியலுக்கு முழுக்கு போட்டுட்டு, முழு நேரமா மக்கள் பணியில இறங்கிட்டாரு. ஆனா, அவர் நடிச்சு முடிச்ச அவரோட கடைசி படமான ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகுறதுல தான் இப்போ ஏகப்பட்ட சிக்கல் ஓடிட்டு இருக்கு.ஜனநாயகன் படம் ஜூன் மாசம் தான் வரும்னு சொல்லிட்டு இருந்தாங்க.

ஆனா இப்போ லேட்டஸ்ட் நியூஸ் என்னன்னா, மறு தணிக்கை குழு (Re-censoring) படத்தை பார்த்துட்டு சான்றிதழ் கொடுக்க ஓகே சொல்லிட்டாங்களாம். இதனால சென்சார் பிரச்சனை ஒரு வழியா முடிவுக்கு வந்துடுச்சு.

தேர்தல் வாக்குப்பதிவு முடிஞ்ச கையோட, அதாவது ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 30-ஆம் தேதி படத்தை ரிலீஸ் பண்ண தயாரிப்பு தரப்பு பிளான் பண்ணிருக்காங்களாம்.

ஆனா இங்க ஒரு ட்விஸ்ட் என்னன்னா, அதே ஏப்ரல் 30-ல கே.வி.என். புரொடக்ஷன்ஸோட இன்னொரு படமான ‘கே.டி.- தி டெவில்’ ரிலீஸ் ஆகுது. ஒரே நாள்ல ரெண்டு படத்தையும் ரிலீஸ் பண்ணுவாங்களாங்குற டவுட் இப்போ கோலிவுட்ல கிளம்பிருக்கு.

ஜனநாயகன் எப்ப வரும்னு தெரியாம மத்த சின்ன பட தயாரிப்பாளர்கள் எல்லாம் தங்களோட ரிலீஸ் தேதியை அறிவிக்காம வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.

போன ஜனவரி  9-ஆம் தேதி படம் வராதுன்னு தெரிஞ்சதும் திடீர்னு ரிலீஸ் ஆன ஜீவாவோட ‘தம்பி தலைவர் தலைமையில்’ படம் பொங்கல் வின்னரானது ஞாபகம் இருக்கும். இந்த மாதிரி திடீர் ரிலீஸ்கள் வசூலை பாதிக்கும்னு எல்லாரும் பயப்படுறாங்க.

விஜய் ஒரு பெரிய கணக்கு போட்டு தான் இந்தப் படத்துல நடிச்சாரு. தெலுங்குல ஹிட் அடிச்ச ‘பகவந்த் கேசரி’ படத்துல வர்ற அதே போல்டான கேரக்டர்ல தான் விஜய்யும் நடிச்சிருக்காரு.

பெண்களை தைரியமானவங்களா மாத்துற அந்த கேரக்டர் மூலமா பெண் வாக்காளர்களை கவரலாம்னு விஜய் பிளான் பண்ணாரு. தேர்தலுக்கு முன்னாடியே படம் வந்தா, மக்கள் எல்லாரும் ‘விசில்’ சின்னத்துக்கு ஓட்டு போடுவாங்கன்னு எதிர்பார்த்தாரு.

ஆனா, இந்த சென்சார் பிரச்சனை வந்து ரிலீஸ் தள்ளிப்போனது விஜய்யோட கணக்கை மொத்தமா மாத்திடுச்சு!நடிகர் ஷாம் விஜய்கிட்ட, “ஏண்ணா இதையே கடைசி படம்னு முடிவு பண்ணிட்டீங்க?

“ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு விஜய் ரொம்ப கூலா, “தம்பி, ஒரே நேரத்துல ஒரு விஷயத்துல மட்டும் போக்கஸ் பண்ணாதான் சாதிக்க முடியும். அதனால தான் சினிமா போதும்னு முடிவு பண்ணிட்டேன்”னு சொல்லிருக்காரு. விஜய்யோட இந்த கடைசி படம் ஒரு வழியா ஏப்ரல் கடைசில வருமா?

இல்ல ஜூன் மாசத்துக்கு போகுமா? கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சொன்னா தான் உண்டு!

What do you think?

பாட்டாளி மக்கள் கட்சி மூன்றாம்கட்ட வேட்பாளர் பட்டியல் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர்

இந்திய சினிமாவையே அதிரவைக்கும் ‘ராமாயணா’! “4000 கோடி பட்ஜெட்.. மிரட்டும் டீசர்!”மெகா பிரம்மாண்டம்!