‘ஜனநாயகன்’ பட லீக் அதிரடியான திருப்பம்
தமிழகத்தையே உலுக்கின தளபதி விஜய்யோட ‘ஜனநாயகன்’ பட லீக் விவகாரத்துல, இப்போ ஒரு அதிரடியான திருப்பம் நடந்திருக்கு!
படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே ஆன்லைன்ல கசிஞ்சதால, சைபர் கிரைம் போலீஸ் ரொம்ப சீரியஸா இந்த கேஸை கையில எடுத்தாங்க.
இப்போ அதோட பலனா 6 பேரை அதிரடியா தூக்கியிருக்காங்க போலீஸ்! இந்த லீக் சாதாரணமா நடக்கல, ரொம்பத் திட்டமிட்டு நடந்த ஒரு கிரிமினல் வேலைன்னு போலீஸ் ஆரம்பத்துலயே கணிச்சாங்க.
டெலிகிராம் குரூப், திருட்டு இணையதளங்கள்னு எல்லா டிஜிட்டல் தடயங்களையும் வச்சு போலீஸ் வலை வீசுனாங்க. இதுல வெவ்வேறு ஊர்ல இருந்த 6 தொழில்நுட்பக் கைப்புள்ளைகளை இப்போ லாக் பண்ணியிருக்காங்க.
இவங்ககிட்ட இருந்து கம்ப்யூட்டர், சர்வர்னு எல்லாத்தையும் பறிமுதல் செஞ்சுட்டாங்க.லீக் ஆன படம் எங்கிருந்து வெளியாச்சுங்கிறது தான் இப்போ இருக்குற பெரிய கேள்வி.
எடிட்டிங் நடந்த இடமா? இல்ல சென்சார் காப்பி அனுப்பும்போது யாராவது கைவரிசைக் காட்டினாங்களா? அப்படின்னு போலீஸ் துருவித் துருவி விசாரிச்சுட்டு இருக்காங்க. பிடிபட்ட 6 பேர்ல சிலர் அப்லோட் பண்ணவங்க, சிலர் அதை வைரல் பண்ணவங்கன்னு தெரியவந்திருக்கு. ஆனா இவங்களுக்குப் பின்னாடி இருக்குற அந்த “மாஸ்டர் மைண்ட்” யாருன்னு தான் இப்போ போலீஸோட டார்கெட்!” ஆயிரக்கணக்கான தொழிலாளர்களோட உழைப்பு இது..
இப்படித் திருடி ரிலீஸ் பண்றது கொஞ்சம்கூட நியாயமே இல்லை”ன்னு மொத்தத் திரையுலகமும் கொதிச்சுப் போயிருக்காங்க.
“தியேட்டர்ல போய் படம் பாக்குறது தான் நீங்க உங்க தலைவனுக்குக் காட்டுற உண்மையான அன்பு”ன்னு ரசிகர்கள் சோசியல் மீடியாவுல ஒரு பக்கம் கேம்பெய்ன் பண்ணிட்டு இருக்காங்க.
சைபர் கிரைம் போலீஸ் என்ன சொல்றாங்கன்னா, “இது ஆரம்பம் தான், இன்னும் நிறையப் பேர் சிக்க வாய்ப்பிருக்கு”ன்னு சொல்லியிருக்காங்க. பிடிபட்டவங்க பின்னணியில எந்த அரசியல் சதியாவது இருக்கா? இல்ல வெறும் காசுக்காகப் பண்ணாங்களா? முழு விவரமும் சீக்கிரம் வெளிய வரும்!
விஜய் படத்துக்கு மட்டும் ஏன் இப்படி அடுத்தடுத்து சோதனைகள் வருது? இந்த 6 பேருக்குப் பின்னாடி யாரு இருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க!