புகார் வாங்க மறுத்த காவல் நிலையத்தை கண்டித்து முற்றுகையிட்ட ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள்.
பள்ளிவாசல் கணக்கு வழக்கு பிரச்சனைகள், பெண்கள் மற்றும் நிர்வாகி மீது தாக்குதல், மூன்று தினங்களாக புகார் வாங்க மறுக்கும் மயிலாடுதுறை காவல் நிலையம், காவல் நிலையத்தை கண்டித்து முற்றுகையிட்ட ஜமாத்தார்கள் மற்றும் பெண்களால் பரபரப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரை தெருவில் ஹாஜியார் நகர் அமைந்துள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான தக்வா பள்ளி வாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் தங்களது தாத்தா எங்களுக்கு கொடுக்க வேண்டிய சொத்தில் ஒரு பங்காக பள்ளிவாசலுக்கு தானமாக கொடுத்தார்.

தற்போது பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கணக்கு வழக்கை கேட்ட ரோசியா பேகம் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகி இலியாஸ் என்பவரிடம் வரவு செலவு கணக்கை கேட்டு உள்ளார். இது தொடர்பாக ரோசியா பேகம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த உமர் பாரூக் ஆகியோர் கேட்கும் பொழுது இலியாஸ் என்பவர் அவரது ஆதரவாளர்களுடன் தகாத வார்த்தைகளால் திட்டியும் கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரோசியா பேகம் மற்றும் அவரது உறவினர் உமர் பாரூக் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் உமர் பாருக் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக புகார் அளிக்க மயிலாடுதுறை காவல் நிலையம் சென்றால், காவலர்கள் புகாரை வாங்க மறுப்பதுடன் அவர்கள் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும்,பெண்கள் தாங்கள் அச்சத்துடன் உயிருக்கு பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ரோசியா பேகம் குற்றம் சாட்டி உள்ளார்.
மூன்றாவது நாளாக இன்று புகார் கொடுக்க வந்தவர்கள் காவல் நிலைய வகையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


