ரசிகர்களுக்கு ஒரு எமோஷனல் ட்ரீட்டா இருக்கு! ஜனநாயகன் 3-வது பாட்டு
தளபதி விஜய் – எச்.வினோத் கூட்டணியில உருவாகிட்டு இருக்குற ‘ஜனநாயகன்’ படத்தோட எதிர்பார்ப்பு இப்போ எகிறிக்கிட்டு இருக்கு.
2026 பொங்கலுக்கு (ஜனவரி 9) படம் வர்றதுக்கு முன்னாடி, அடுத்தடுத்து அப்டேட்டுகளைக் கொடுத்து படக்குழு ரசிகர்களை குஷிப்படுத்திட்டு இருக்காங்க.
அனிருத் மியூசிக்ல ஏற்கனவே வெளியான “தளபதி கச்சேரி”, “ஒரு பேரே வரலாறு” ரெண்டு பாட்டுமே சோஷியல் மீடியாவை அதிர வச்சிருச்சு.
இப்போ அதைத் தொடர்ந்து 3-வது பாட்டுக்கு நேரம் வந்தாச்சு! இந்தப் படத்தோட 3-வது பாடலான “செல்ல மகளே” நாளைக்கு ரிலீஸ் ஆகுது.
இதோட ஸ்பெஷலே என்னன்னா, இந்தப் பாட்டை நம்ம தளபதி விஜய் அவரோட சொந்தக் குரல்ல பாடியிருக்காரு! ஒரு அப்பா – மகள் பாசத்தைச் சொல்ற பாட்டா இது இருக்கும்னு தெரியுது.
இப்போ இந்தப் பாட்டோட சூப்பரான புரோமோ வீடியோவை படக்குழு ரிலீஸ் பண்ணிருக்காங்க. முழுப் பாட்டும் இன்று சாயங்காலம் 5.04 மணிக்கு ரிலீஸ் ஆகும்னு அதிகாரப்பூர்வமா சொல்லிட்டாங்க.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல்னு பெரிய டீமே இந்தப் படத்துல இருக்காங்க.
இது தளபதியோட கடைசி படம்னு சொல்லப்படுறதால, ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு ஒரு எமோஷனல் ட்ரீட்டா இருக்கு! 5.04-க்கு ‘தளபதி’ குரலை கேக்க நீங்க ரெடியா?


