in

என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது!- கோர்ட்டில் கமல் அதிரடி! தனியார் நிறுவனத்துக்கு விதித்ததடை


Watch – YouTube Click

 

நம்ம ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் இப்போ சென்னை உயர்நீதிமன்றத்துல ஒரு செம அதிரடியான வழக்கைப் போட்டிருக்காரு.

எத்தனையோ கேரக்டர்ல நடிச்ச நம்ம கமல், இப்போ நிஜ வாழ்க்கையில தன்னோட “உரிமைக்காக” ஒரு முக்கியமான போராட்டத்தை ஆரம்பிச்சிருக்காரு.

நடிகர், தயாரிப்பாளர், அரசியல் தலைவர்னு பன்முகத் திறமை கொண்ட நம்ம கமல் சார், இப்போ சென்னை ஹைகோர்ட்ல ஒரு “தனிநபர் அடையாள உரிமை” (Personality Rights) வழக்கை தாக்கல் பண்ணியிருக்காரு.

சென்னையில இருக்குற ஒரு தனியார் நிறுவனம், நம்ம கமல் சாரோட போட்டோ, அவர் படத்துல பேசுன பேமஸ் வசனங்கள், அவரோட உருவம் எல்லாத்தையும் வச்சு டி-ஷர்ட் (T-shirts) மத்த பொருட்களைத் தயாரிச்சு வித்துட்டு வராங்களாம்.

“இதையெல்லாம் என்னோட அனுமதி இல்லாம எப்படி வணிக லாபத்துக்காகப் பயன்படுத்தலாம்?”னு கமல் தரப்பு கேள்வி எழுப்பிருக்காங்க.

அதனால, அந்த நிறுவனத்துக்குத் தடை போடுறது மட்டும் இல்லாம, இனிமே யாருமே அவரோட பேரு, குரல், புகைப்படம் எதையும் பிசினஸ் விஷயத்துக்காகப் பயன்படுத்தக் கூடாதுன்னு நிரந்தரத் தடை கேட்டிருக்காரு.

சட்டப்படி பார்த்தா, ஒரு பெரிய பிரபலத்தோட பேரு, அவரோட கையெழுத்து, குரல், முகம் இது எல்லாமே அவரோட “சொத்து” மாதிரிதான்.

அவங்ககிட்ட பர்மிஷன் வாங்காம டி-ஷர்ட்ல போடுறதோ இல்ல விளம்பரத்துக்குப் பயன்படுத்துறதோ சட்டப்படி தப்பு.

ஏற்கனவே பாலிவுட்ல அமிதாப் பச்சன், அனில் கபூர் மாதிரி ஆளுங்க இந்த மாதிரி வழக்குப் போட்டு ஜெயிச்சிருக்காங்க. இப்போ கமல் சாரும் அந்த லிஸ்ட்ல சேர்ந்து, தமிழ் சினிமாவுல ஒரு பெரிய முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்காரு.

இப்போ இருக்குற டெக்னாலஜியில ஒருத்தரோட குரலையும் முகத்தையும் AI வச்சு அப்படியே அச்சு அசலா கொண்டு வந்திடலாம். அந்த மாதிரி தவறான விஷயங்கள் Futureல நடக்கக்கூடாதுன்னு தான் கமல் இப்போவே உஷாரா இந்த சட்ட நடவடிக்கையை எடுத்திருக்காருனு சொல்லப்படுது.


Watch – YouTube Click Shorts

What do you think?

கரூர் சம்பவத்தில் விஜய் சென்னைக்கு புறப்பட்டு சென்றது தான் புத்திசாலித்தனம்

பாசத்துல ரசிகர்கள் செஞ்ச இந்த ‘ஆரத்தி’ காரியம்