in

இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பதி கோவிலில் வேண்டுதல் வழிபாடு

இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பதி கோவிலில் வேண்டுதல் வழிபாடு

 

நாசா-இஸ்ரோ கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய இருக்கும் நிலையில் அதன் பயணம் வெற்றி அடைய இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பதி கோவிலில் வேண்டுதல் வழிபாடு.

நாசா- இஸ்ரோ ஆகிய விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் கூட்டு முயற்சியாக நிசார் என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளன.

12 நாட்களுக்கு ஒரு முறை பூமியை மொத்தமாக சுற்றி வந்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வதற்காக இந்த செயற்கைக்கோளை நாசா- இஸ்ரோ ஆகிய விண்வெளி ஆய்வு மையங்கள் தயாரித்துள்ளன.

அதன் பயணம் நாளை மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எஸ் 16 ராக்கெட் மூலம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நிசார் செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் ஏழுமலையான் கோவிலில் வேண்டுதல் வழிபாடு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன் 12 நாட்களுக்கு ஒரு முறை பூமியை முழுவதுமாக சுற்றி வந்து பூமியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, பூகம்பம் ஆகிவை உள்ளிட்ட இயற்கையாக ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை முன்னதாகவே அறிந்து கொள்ள நாசர் செயற்கைக்கோள் பயன்படும்.

அடுத்த ஆண்டு சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்ப தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன 2004 ஆம் ஆண்டு மனிதனை இஸ்ரோ சந்திரனுக்கு அனுப்பும். சுபாசன் சுக்லாவை விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நாசா இஸ்ரா ஆகியவை இணைந்து செயல்படுத்தி வருகின்றன என்று அப்போது கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவில் ஒருவர் ககன்யான் திட்ட விண்கலத்தை இந்திய தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரித்து இந்தியாவிலிருந்து செயல்படுத்துவோம்.

எனவே அது முழுக்க முழுக்க இந்தியாவின் சொந்த திட்டமாக அமையும் என்று குறிப்பிட்டார்.

What do you think?

ஏழுமலையான் வழிபாடு செய்த முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

அதிகளவில் TREND..ஆன என்ன சுகம் SONG