சக கலைஞரை மதிக்கும் லட்சணம் இதுதானா? விளாசிய ப்ளூ சட்டை மாறன்
ரஜினியின் அதிசய பிறவி என்ற படத்தில் காமெடி நடிகரான கிங்காங் ஒரு சில காட்சிகள் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக காமெடி நடிகராக நடித்து வருபவர் நடிகர் கிங்காங்.
உயரம் குறைவாக இருந்தாலும் நகைச்சுவையில் அசத்துப்பவர். இவரின் மகளின் திருமணம் நேற்று காலை நடைபெற்றது.
Vishal, டி ராஜேந்திரன் தவிர மற்ற நடிகர்கள் யாரும் திருமணத்தில் பங்கேற்கவில்லை எல்லோருக்கும் நேரில் சென்று திருமண அழைப்பை கொடுத்தும் இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது, இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் x தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
உயரம் கம்மியாக இருந்தாலும் முன்னணி காமெடி நடிகராக முன்னேறியவர் நடிகர் கிங் காங் சினிமா வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் சக கலைஞர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று கலை சேவை செய்வார்.
சிறுக சிறுக பணத்தை சேர்த்து சென்னையில் தனக்கு சொந்தமாக வீடு கட்டியவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
தன் முதல் மகளின் திருமணத்திற்கு பல சினிமா பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்திருக்கிறார் ஆனால் யாரும் திருமணத்துக்கு செல்லவில்லை காரணம் இவரோ சாதாரண காமெடி நடிகர், உயரம் குறைவானவர், வசதி இல்லாதவர் இவரின் திருமணத்திற்கு ஒரு நடிகர் கூட போக மனம் இல்லையா சக கலைஞரை மதிக்கும் லட்சணம் இதுதானா ஆனால் ஆடியோ லான்ச்சில் மனித நேயம், சமத்துவம் பற்றி வாய் கிழிய மணி கணக்கில் பேசுவார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.


