நெய்வேலியில் கோடிக்கணக்கில் பேரம் பேசி இரிடியம் விற்பனை
நெய்வேலியில் இரிடியம் மறைத்து வைத்து, கோடிக்கணக்கில் பேரம் பேசி, விற்பனை செய்ய முயன்றவர்களை, கைது செய்த காவல்துறையினர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 30-ல் இரிடியம் வைத்து, ஒரு கும்பல் கடந்த ஒரு மாதமாக விற்பனை செய்ய முயன்றுள்ளனர். இதனை திட்டமிட்ட குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் வட்டம் 30-ல் உள்ள ஜெயபால் என்பவரது வீட்டில் இன்று குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் உள்ளே சென்று பார்த்த பொழுது, அப்பொழுது வீட்டின் உள்ளே ஏழு பேர் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இருடியம் வைத்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்த முருகன், மணிகண்டன், விக்னேஸ்வரன், ஜெயவேல் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்து, இருடியம் மற்றும் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவர்களை பறிமுதல் செய்து நெய்வேலி தெர்மல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தெர்மல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட கும்பல், கைப்பற்றப்பட்ட இருடியதை, வெளிநாட்டு பகுதிகளுக்கு 150 கோடி முதல் 400 கோடி வரை பேரம் பேசியதாகவும், அவ்வாறு பேரம் பேசும் போது அதனை அறிந்த காவல்துறையினர், இருடியத்தை வாங்குவது போல் நடித்ததாகவும், சம்பந்தப்பட்ட கும்பல் முன் தொகையாக 25 லட்சம் கேட்டதால், அதைக் கொடுப்பது போல் வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட கும்பலை பிடித்ததாக கூறப்படுகிறது.

சதுரங்கவேட்டை படப்பானியில், அரங்கேறிய சம்பவத்தால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டது.


