செஞ்சி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம் – 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு.
செஞ்சி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம் – ஸ்ரீரங்க பூபதி செவிலியர் கல்லூரி மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சூரிய நமஸ்கரம், பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோக தினம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. செஞ்சி அரசு மருத்துவமனை அரசு மருத்துவ அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் அலுவலர் சித்த மருத்துவர் அஜித்தா ரமேஷ்பாபு பயிற்சி அளித்து தொடங்கி வைத்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரமேஷ்பாபு கலந்து கொண்டு யோகா குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி கல்லூரி நிறுவனத்தின் செவிலியர் கல்லூரி மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சூரிய நமஸ்கரம், பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரமேஷ்பாபு பேசுகையில், யோகா பயிற்சி அனைவருக்கும் ஒரு முக்கியமான ஒன்றாகும். மேலும் யோகா பயிற்சி செய்வதால் மன அமைதியை ஏற்படுத்துகிறது, வாழ்வியல் முறையில் உடல் முன்னேற்றத்திற்கு மாற்றம் ஏற்படும், மனம் சார்ந்த பிரச்சினைகள், உடல் சுவாச கோளாறு பிரச்சனைகள் சரி செய்வதற்காகவே யோகா பயிற்சி மிக சிறந்த பயிற்சியாக விளங்கி வருகிறது.
யோகா பயிற்சி வாழ்வில் முன்னேற்றங்கள் வாழ்வில் முறை மாற்றங்களை உருவாக்குகிறது. மேலும் நம் உடலில் உள்ள கல்லீரல் மண்ணீரல் ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. எனவே கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் வாரத்தில் ஒரு முறையாவது 15 நிமிடம் யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும் என எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் பாலகோபால், மருத்துவர்கள் சுமதி, ராஜலட்சுமி, செவிலியர் மேற்பார்வையாளர் ஆதிலட்சுமி, மருந்தாளுநர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர்.