in

திருச்சுழி 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்த சுவாரசியம்

திருச்சுழி 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்த சுவாரசியம்

 

திருச்சுழி அருகே 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்த சுவாரசியம் – ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே சேதுராயனேந்தல் கிராமத்தில் இருந்து 108 சேவை மையத்திற்கு பிரசவத்திற்காக மருத்துவனைக்கு அழைத்து செல்வதற்காக இன்று அதிகாலை 2 மணி அளவில் அழைப்பு வந்தது.

உடனே நரிக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அங்கு விரைந்து சென்று சதீஷ்குமார் என்பவரின் மனைவி மகாதேவி (22) என்பவர் பிரசவ வழியில் துடித்துக் கொண்டிருந்தார்.

இவரை 108 ஆம்புலன்ஸில் ஏற்றுக்கொண்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஆனால் கர்ப்பிணிப் பெண் மகாதேவி பிரசவ வழியில் குழந்தை பிறக்கும் தருவாயில் இருந்ததால் ஆம்புலன்ஸை சுந்தரநடப்பு என்ற பகுதியில் நிறுத்தி 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் அவசரகால மருத்துவ உதவியாளர் விஜயலட்சுமி மற்றும் ஓட்டுநர் சின்ன வெள்ளை உதவியுடன் பிரசவம் பார்த்தனர்.

இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் இருந்ததையொட்டி இருவரையும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

மேலும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

What do you think?

மதுரை பாண்டிகோவில் அறுபடை வீடுகளின் கண்காட்சி

தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு தரிசனம்