in

நெல்லிதோப்பு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 10,000 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வின் துவக்க விழா

நெல்லிதோப்பு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 10,000 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வின் துவக்க விழா.

லெனின் வீதி கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக புதுவை மாநில செயலாளர் திரு. ஓம்சக்தி சேகர் அவர்கள் கலந்து கொண்டு.

நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள 10,000 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் பணியினை இன்று துவக்கி வைத்தார்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ வெல்லம், ஒரு பால் பாக்கெட், 1 கிலோ உப்பு, ஒரு புடவை, பேண்ட், சட்டை துணி மற்றும் பால் பொங்குவதற்கான ஒரு பாத்திரம் ஆகியவை அடங்கும்.

இந்நிகழ்வில் திரு. ஓம்சக்தி சேகர் அவர்கள் பேசுகையில், “உங்களின் ஆதரவுடன் 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து உங்களுக்கான சேவைகளை சிறப்பான முறையில் தொடர்ந்து செய்து வந்தேன்.

துரதிருஷ்டவசமாக கடந்த 10 ஆண்டுகளாக உங்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக நான் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், நான் பதவியில் இல்லாவிட்டாலும் உங்களுக்காக எப்போதும் பணியாற்றி வருகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் நெல்லித்தோப்பு தொகுதி எந்த நிலையில் உள்ளது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கண்டிப்பாக சிறப்பானதாக அமையும். உங்களிடமிருந்து இனி எப்போதும் என்னை யாராலும் பிரிக்க முடியாது.

உங்களின் நல்ஆதரவுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெறுவது உறுதி” என்றார்.

இந்த நிகழ்வில் சதாசிவம், சங்கர் உடையார், RVR வெங்கடேசன், பெரியார் நகர் சேகர், முனியன், லாரி முருகன், குப்புசாமி உடையார், ஆசாரி ரமேஷ், தம்பா, பிரபு, புகழ் பாரி, வரதராஜ், இளவரசு, வேல்முருகன், அருள், முனி ரத்தினம், விஷ்ணு, குள்ள வேலு, தருண், கன்னியம்மாள், இந்திரா, கலா, காந்திமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

கோவாவில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு தேனியில் உற்சாக வரவேற்பு

புதுச்சேரி அரசு மின்சாரப் பேருந்து ஓட்டுநர்கள் பி.எப், இ.எஸ்.ஐ. பணம் பிடித்தம் செய்யாத நிர்வாகத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்க கோரி பேருந்துகளை இயக்காமல் திடீரென வேலைநிறுத்த போராட்டம்