in

குத்தாலத்தில்  என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி

குத்தாலத்தில்  என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி

 

 

குத்தாலத்தில் வாக்குச்சாவடி எண் 251ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரையை நிகழ்ச்சி சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் பேரூராட்சி உட்பட்ட வாக்குச்சாவடி எண் 251ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரையை நிகழ்ச்சி சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு திமுக நகர துணை செயலாளர் குமார் தலைமை வகித்தார்.பேரூர் நகர துணை செயலாளர் ஷர்மிளா சட்டசெந்தில் முன்னிலை வகித்தார்.வார்டு செயலாளர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் கலந்து கொண்டு திமுக அரசின் ஐந்து ஆண்டு சாதனைகள் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை மேலும் வலுப்படுத்தவும் வருகின்ற 2026ல் திமுக ஆட்சி மீண்டும் மலரவும் நாம் அயராது பாடுபட வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது மாவட்ட பிரதிநிதி உலகநாதன், ஐயப்பன்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சேகர், ஞானசம்பந்தம், ராஜலட்சுமி தினேஷ், வார்டு செயலாளர்கள் கணேஷ், அச்சுதராமன், அயலக அணி ராமலிங்கம், முன்னாள் இளைஞரணி கார்த்திக்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

தேனி அருகே 150 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை வெட்ட முயற்சி: கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

மணக்குடி சக்திபுரிஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதீனகர்த்தர் சிறப்பு வழிபாடு