திண்டுக்கல்லில் ஆண்டாள் அலங்காரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை
திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று 04.01.26 மாலை 3 வயது குழந்தை முதல் 16 வயது பெண்கள் மற்றும் சிறுவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்


உலக சாதனை நிகழ்ச்சியில் 600கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியாக பரதநாட்டிய ஆடை அணிந்தும் ஆண்டாள் சிகை (கொண்டை) அலங்காரம் மற்றும் மாலை அணிந்தும் வருகை தந்தனர்.பின்னர் அனைவரும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டனர்.
ஆண்டாள் பாராசுரங்களான நாச்சியார் திருமொழி பாசுரமான வாரணம் ஆயிரம் வாய்பாட்டுக்கு ஏற்றவாறு 24 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர்.


மேலும் 4 வயது குழந்தை உட்பட 9 மாணவிகள் மண்பானையின் மீது ஏறி நின்று பரதநாட்டியம் ஆடினர் இந்த சாதனையானது உலக ஜெனியஸ் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்தது.
உலக சாதனை நிகழ்ச்சி படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் டிராபி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை பரதநாட்டிய குருமார்கள், குழந்தைகளின் பெற்றோர்கள், பார்வையாளர்கள் என ஏராளமானோர் கண்டு களித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதி நடனாலயம் குழுவினர் செய்திருந்தனர்.
பேட்டி ;
1. கிறிஸ்துராஜ் பெர்னாண்டஸ்
நிறுவனர், வேர்ல்ட் ஜீனியஸ் புக் ஆப் ரெக்கார்ட்
2. காந்திமதி மணிவண்ணன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

