”இதயம் உடைஞ்சா மீண்டு வர முடியுமா?” அர்ஜுன் தாஸின் காதல் தோல்வி பின்னணி
தமிழ் சினிமாவுல வில்லன்னாலே ஒரு பயம் வரும், ஆனா அர்ஜுன் தாஸ் வில்லனா நடிச்சா ரசிகர்களுக்கு ஒரு தனி குஷிதான். அந்த கணீர்னு இருக்குற ‘பேஸ் வாய்ஸ்’, மிரட்டலான லுக்னு மனுஷன் குறுகிய காலத்துலயே எக்கச்சக்க ரசிகர்களைச் சேர்த்துட்டாரு.
இப்போ சோசியல் மீடியாவுல அவரைப் பத்தின ஒரு விஷயம் தான் பயங்கரமா பேசப்பட்டு வருது.2012-லயே ‘பெருமான்’ படம் மூலமா அறிமுகமானாலும், அர்ஜுன் தாஸுக்கு பெரிய பிரேக் கொடுத்தது லோகேஷ் கனகராஜோட ‘கைதி’ படம் தான்.
அதுல அவர் பேசின “படிக்கட்டு..” டயலாக் இப்போ வரைக்கும் ஃபேமஸ். அதுக்கப்புறம் ‘மாஸ்டர்’, ‘அந்தகாரம்’, ‘விக்ரம்’னு பெரிய படங்கள்ல நடிச்சு மிரட்டினாரு.
இப்போ ‘குட் பேட் அக்லி’ படத்துலயும் அவர் இருக்கிறதா பேசப்படுது. பசங்களுக்கு அவர் வாய்ஸ் பிடிக்கும்னா, பொண்ணுங்களுக்கு அவர் ஒரு ‘கனவுக் கண்ணன்’! வில்லனா ஸ்கிரீன்ல மிரட்டுற அர்ஜுன் தாஸ், நிஜத்துல ரொம்ப சாஃப்ட். சமீபத்துல அவர் தன்னோட இன்ஸ்டாகிராம் ஸ்டோரில ஒரு பதிவைப்போட்டு ரசிகர்களைக் குழப்பத்துல ஆழ்த்திருக்காரு.
அதுல அவர், “ஒருத்தரை ரொம்ப ஆழமா காதலிச்சு, அப்புறம் அவங்க உங்க இதயத்தை உடைச்சிட்டாங்கன்னா.. அதுல இருந்து ஒருத்தர் எப்படி மீண்டு வர முடியும்?” அப்படின்னு ரொம்ப ஃபீல் பண்ணிக் கேட்டுருக்காரு.
இந்த ஸ்டோரியைப் பார்த்ததும் ரசிகர்கள் ரெண்டு பிரிவாப் பிரிஞ்சுட்டாங்க. ஒரு தரப்பு, “தலைவருக்கு ஏதோ லவ் ஃபெயிலியர் போல.. அதான் இவ்வளவு ஃபீல் பண்றாரு”னு சொல்றாங்க. இன்னொரு தரப்பு, “இது அவரோட அடுத்த படத்தோட புரமோஷனா கூட இருக்கலாம்”னு கெஸ் பண்றாங்க. எது எப்படியோ, அர்ஜுன் தாஸ் போட்ட அந்த ஒரு போஸ்ட் இப்போ கோலிவுட் வட்டாரத்துல பெரிய விவாதத்தையே கிளப்பிருக்கு!


