லாபத்திற்காக படம் எடுக்க மாட்டேன்
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்த ரமணா கம்யூனிகேஷன் தற்போது திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றையும் திரைப்படமாக தயாரித்து வருகிறது.
ஏஜே பாலகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் வள்ளுவராக கலைச்செல்வன் வாசுகியாக தனலட்சுமி நடிக்கிறார்.
இசை இளையராஜா பாலகிருஷ்ணன் பட விழாவில் பேசும்பொழுது ஒரு மோசமான திரை கதையை கொண்டு நல்ல படம் எடுக்க முடியாது ஒரு நல்ல படத்திற்கு திரை கதை ஆணிவேர் காமராஜர் படத்தை தொடர்ந்து திருவள்ளுவர் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுங்கள் என்று என்னிடம் பலர் கூறினார்கள்.
திருக்குறளில் உள்ள 1330 குரலை எப்படி படமாக்க முடியும் என்று யோசித்தபோது எங்களுக்கு முன் உதாரணமாக அமைந்தது கருணாநிதியின் குரலோவியம் கடும் சவால்களுக்கு இடையே படத்தை எடுத்து முடித்தோம் நான் லாபத்திற்கு படம் எடுப்பவன் அல்ல என்னை பொறுத்தவரை நல்ல விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எனது நோக்கம் என்றார்.


