in

திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்தது இல்லை- பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு

திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்தது இல்லை- பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு

 

திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்தது இல்லை. சிறு தவறுகள் நடந்தாலும் அதை விமர்சிப்பது இல்லை. கூட்டணி சீட்டுகள் பற்றியும் கவலைப்படவில்லை திண்டுக்கல் லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு.

திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் மதிமுக சார்பில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் பற்றிய பொதுக் கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள் உட்பட 50 பேர் மதிமுக-வில் இணைந்தனர்.

பின் பொது கூட்டத்தின் மேடையில் பேசிய வைகோ :

திமுக கூட்டணி வெற்றி பெற்று நல்லாட்சி நடத்தி அனைத்து மாநிலங்களையும் பின்பற்ற வைக்கின்றார் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த கூட்டணி களத்தில் இருந்து வெற்றி பெறுவதற்கு நான் குரல் கொடுப்பேன் மதிமுக தோள் கொடுத்து நிற்கும். பல லட்சம் கொடுக்க முன் வந்தும் மதிமுக ஏழை மக்கள் கூட வேறு கட்சிக்கு செல்லவில்லை.

பாஜக கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ஓட்டுரிமையை பறிப்பதற்கு முயற்சி செய்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை சுயநலம் காரணமாக நான் எதிர்க்கவில்லை.

பாஜக கூட்டணியில் இருந்தேன். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு அவருக்குள் ராஜபக்சே வருகிறார் என்று தெரிந்தவுடன் கூட்டணியை விட்டு விலகினேன்.

நான் உண்மையான பெரியார் தொண்டன். கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும் மதிமுக செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்தது இல்லை. சிறு தவறுகள் நடந்தாலும் அதை விமர்சிப்பது இல்லை. கூட்டணி சீட்டுகள் பற்றியும் கவலைப்படவில்லை. பாராளுமன்றத்திலும் தமிழக முதல்வர் திறன்பட செயல்படுகிறார் என தெரிவித்துள்ளேன்.

விவசாயிகளை பாஜக அரசு வஞ்சிக்கிறது. மாநில அரசு இதில் தலையிட முடியாது.

திராவிட ஆட்சிக்கு என்றும் துணை நிற்பேன்” என தெரிவித்தார்.

What do you think?

ஆலகிராமம் மகா சங்கடஹர சதுர்த்தியை சிறப்பு அபிஷேகம்

சுதந்திர தின விழாவையொட்டி காவல் துறை மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் இறுதி அணிவகுப்பு ஒத்த்திகை