கூர்க் சமூகத்திலிருந்து வந்த முதல் நடிகை நான்தான்
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது திரைவாழ்க்கையில் பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளார்.
ஆனால், இந்த முறை, அவர் தனது சொந்த சமூகத்தினரான கொடவர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஊடக உரையாடலின் போது, கொடவா சமூகத்திலிருந்து திரைப்படத் துறையில் நுழைந்த முதல் நடிகை நான்தான் , கொடவா சமூகத்திலிருந்து யாரும் எனக்கு முன் திரைப்படத் துறையில் நுழைந்ததில்லை என்று அவர் கூறினார்.
உண்மையில் அவரது கூற்று, தவறானது. கர்நாடகாவின் கூர்க் பகுதியைச் சேர்ந்த ஒரு இனக்குழு. விளையாட்டு முதல் சினிமா வரை பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.
Actor Neravanda Prema, Shashikala, Nidhi Subbaiah, Tanisha Kuppanda, Daisy Bopanna, Harshika Poonacha. போன்றவர்கள் கூர்க் இனத்தை சேர்ந்த கலைஞர்கள்.
தெலுங்கு அல்லது இந்தி சினிமாவில் முதலிடத்தைப் பிடித்த முதல் கொடவா இனத்தைச் சேர்ந்தவராக ராஷ்மிகா இருக்கலாம்.
ஆனால் இந்த துறைக்கு கூர்க் மக்கள் புதிதல்ல என்பதை ராஷ்மிகா பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்று நடிகை ஹர்ஷிகா பூனாச்சா கூறினார்.


