in

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய கூறி கட்டாயப்படுத்துவதாக கணவர் புகார்

 

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய கூறி கட்டாயப்படுத்துவதாக கணவர் புகார்

 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய கூறி கட்டாயப்படுத்துவதாக கணவர் புகார் – மனைவி செல்போன் வீடியோ கால் மூலம் கணவருக்கு தகவல் தெரிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அய்யலூர், சுக்காவழி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன், இவரது மனைவி ஜெயலட்சுமி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை மையக் கட்டிடத்தில் 3வது கடந்த வியாழக்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்து கொள்ளும்படி மருத்துவர்கள், செவிலியர்கள் கட்டாயப்படுத்துவதாகவும் மேலும், குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யவில்லை என்றால் எத்தனை நாட்கள் ஆனாலும் தங்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மாட்டோம் என தெரிவித்ததாக தொலைபேசியின் மூலம் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில் இருக்கும் ஜெயலட்சுமிக்கு துணைக்கு கூட ஆள் இல்லாத நிலையில் இருந்து வருகிறார்.

மேலும், ஜெயலட்சுமியின் தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 48 நாள் பின் மருத்துவமனைக்கு வந்து குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்வதாக தெரிவித்தும் அதனை ஏற்றுக்கொள்ள மருத்துவர்கள் மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

What do you think?

இவரும் மஹாநதி சீரியல்…லை விட்டு விலகிட்டாரா

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா மேடையில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்