திருமலையில் வெளுத்து வாங்கும் கனமழை
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் திருப்பதி மாவட்டம் ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
தொடர் மழையின் தாக்கம் திருமலையில் சற்று அதிகமாக உள்ள நிலையில் நேற்று இரவு துவங்கி திருமலையில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பக்தர்கள் பல்வேறு வகையான சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக சாமி கும்பிடுவதற்காக வரிசைக்கு செல்வது,கோவிலில் இருந்து வந்தபின் பேருந்து நிலையம், தங்கும் அறைகள் ஆகியவற்றிற்கு செல்வது, லட்டு பிரசாதம் வாங்க செல்வது போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள கனமழை இடையூறாக அமைந்துள்ளது.

கனமழை காரணமாக திருப்பதி மலையில் உள்ள தாழ்வான பகுதிகள் ஏழுமலையான் கோவில் முன்பகுதி ஆகியவற்றை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


