செஞ்சியில் ஒரு மணி நேரமாக கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளான மேல்மலையனூர், வளத்தி, ஆலம் பூண்டி, அப்பம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த இரண்டு மாதமாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் கடுமையான வெப்ப காற்று வீசியது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். மேலும் விவசாய நிலங்களுக்கு போதுமான பாசன வசதியின்றி விவசாயிகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை வேலைகளில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு கனமழையானது பொழிந்தது. இதனை தொடர்ந்து இன்று மாலை குளிர்ச்சியான காற்று வீசியதை தொடர்ந்து ஒரு மணி நேரம் கனமழை பொழிந்ததால் தெருக்கள் மற்றும் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.
இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளன.


