in

மாணவர்களுக்கு ஆர்டிஇ தொகையை வழங்க அரசு குளறுபடி

மாணவர்களுக்கு ஆர்டிஇ தொகையை வழங்க அரசு குளறுபடி

 

மாணவர்களுக்கு ஆர்டிஇ தொகையை வழங்க அரசு அறிவித்த நடைமுறையில் குளறுபடி:- மாணவர்கள் தேர்வில் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும்,கடந்த 2 ஆண்டுகளில் வழங்க வேண்டிய ரூ.966 கோடியை அரசு வட்டியுடன் சேர்த்து விரைந்து வழங்க வேண்டும் நிகழாண்டுக்கான தொகை எப்போது வழங்கப்படும் என்பதையும் அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.குடியரசு பேட்டி.

தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.குடியரசு மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, அவர் கூறுகையில், ஜூன் மாதம் முதல் பள்ளிகளில் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களை ஆர்டிஇயில் சேர்க்க விருப்பமுள்ள பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று பள்ளிகள் மூலமாகவே அதனை அனுப்பி, குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்ந்தெடுத்து ஆர்டிஇ தொகையை வழங்க வேண்டும் என ஆர்டிஇ தொடர்பாக தமிழ்நாடு அரசு தற்போது சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆர்டிஇ சட்டத்தை அமல்படுத்த நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம்.இதற்கு முன்பு அமலில் உள்ளவாறே தகுதி உடைய பெற்றோர் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து, அதன் மூலமாக பள்ளிகளுக்கு பட்டியல் அனுப்பப்பட்டு அதனடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சரியாக இருக்கும்,. தற்போது சொல்லப்பட்டுள்ள நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அனைத்து பெற்றோரும் இதற்கு விருப்பம்தான் தெரிவிப்பார்கள். அப்படியெனில் உண்மையான பயனாளிகளுக்கு கிடைக்காமல், குலுக்கல் முறையில் அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பாக இது மாறிவிடும். நலிவடைந்தோர்களின் பிள்ளைகள் நலனுக்காக கொண்டுவரப்பட்ட இத்திட்டம், அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு கிடைக்கக்கூடியதாக மாறிவிடும்.

எனவே தமிழக அரசு இதனை பரிசீலித்து பழைய நடைமுறையில் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு 2023-24 ஆண்டுக்கான சுமார் ரூ.494 கோடி, 2024-25-ம் ஆண்டுக்கு சுமார் ரூ.470 கோடி தொகை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான நிலை என்னவென்று தெரியவில்லை. அதற்கான ஒரு தெளிவும் எங்களுக்கு வேண்டும்.

சேர்க்கையை தொடங்குவதற்கோ, அரசின் உத்தரவை பின்பற்றுவதற்கோ நாங்கள் 100 சதவீதம் கடமை பட்டுள்ளோம்.ஆனால் கடந்த ஆண்டுகளுக்கு உரிய தொகை எப்போது எங்களுக்கு வழங்கப்படும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.மேலும், இதுவரை கொடுக்க வேண்டிய தொகையை வட்டியை சேர்த்து கொடுத்தாலாவது நன்றாக இருக்கும்.

நிலுவையில் உள்ள கட்டண தொகையை விரைந்து வழங்க வேண்டும்.அரசு இந்த நிலுவை தொகையை வழங்காத காரணத்தால் பல்வேறு பள்ளிகள் மூடக்கூடிய சூழலில் உள்ளன.தனியார் பள்ளிகளையும் அரசு காப்பாற்ற வேண்டும்.

தமிழக அரசும், முதல்வரும் இதில் தலையிட்டு.கல்வித்துறை அமைச்சர்,செயலர் உள்ளிட்டோர் பள்ளி தாளார்களை சந்தித்துப் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

What do you think?

திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விசிகவினர் திடிர் சாலைமறியல் போராட்டம்

மக்களுடன் ஸ்டாலின் முகாமினை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வருகை