செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் ரூபாய் 66 -லட்சம் பாக்கி வைத்த அரசு பேருந்து
செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் ரூபாய் 66 -லட்சம் பாக்கி வைத்ததால் அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு-நிர்வாக திறனற்ற போக்குவரத்து துறையால் பயணிகள் அவதி.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் என்ற இடத்தில் புதுச்சேரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு வருடமாக சுங்க சாவடி செயல்பட்டு வருகிறது.
இந்த சுங்க சாவடியில் அரசு பேருந்துகள் சென்று வர சுங்க கட்டணம் அவ்வப்போது போக்குவரத்து துறையால் கட்டப்பட்டு வரும் என்று கூறப்படுகிறது.ஆனால் கடந்த நான்கு மாதமாக சுங்க கட்டணம் ரூபாய் 6669581 தொகை வரை சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு பணம் செலுத்தாமல் பாக்கி வைத்த விழுப்புரம் பணிமனை, திருவண்ணாமலை பணிமனை வேலூர் பணிமனை காஞ்சிபுரம் பணிமனை தர்மபுரி பணிமனியை சேர்ந்த பேருந்துகளின் தலைமையிடமாக விளங்கும் விழுப்புரம் கோட்டம் போக்குவரத்து துறை சார்பில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இன்று இந்த சுங்க சாவடியில் கட்டணம் செலுத்தாத அரசு பேருந்துகள் செல்வதற்கு சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் அனுமதி மறுத்த நிலையில், அந்தப் பேருந்துகள் சுங்க சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனால் அந்தப் பேருந்தில் வந்த பயணிகள் நீண்ட நேரமாக பேருந்திலேயே காத்திருந்து அவதி அடைந்தனர்.பின்னர் ஒரு பேருந்தில் பயணித்த பயணி நான் வந்த பேருந்துக்கு இந்த ஒரு முறை செல்வதற்கு சுங்க கட்டணம் எவ்வளவு நான் கட்டி விடுகிறேன் அந்த பேருந்து விடுங்கள் என்று சுங்கச்சாவடி ஊழியரிடம் வாக்கு ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது மேலும் சுங்க சாவடியில் பணம் செலுத்தாத அரசு பேருந்துகள் அனுமதிக்காத நிலையில் சுங்க கட்டணம் செலுத்திய அரசு பேருந்தின் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடியில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதி….


