in

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்

 

கடலூர் மாவட்டம் வேப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை மழைக்காலம் என்பதால் நேற்று மாலையில் இருந்து இரவு வரை ஆடுகள் விற்பனை அமோகம்.

ஆடுகளின் எண்ணிக்கையை குறிப்பிடாமல் ஆடுகளுக்கான டோக்கன் தொகையையும் குறிப்பிடாமல் ரசீது வழங்கல் ஆடு ஒன்றிற்கு 60 முதல் 80 ரூபாய் வரை வசூல் செய்ததால் சந்தைக்கு வெளியே விற்பனை செய்த வியாபாரிகளுடன் களுடன் ஒப்பந்ததாரர் வாக்குவாதம்.

ஆடுகளுக்கான டோக்கன் தொகையை வரம்பு மீறி எதற்கு அதிகமாக வசூல் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பி அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்து அடாவடியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தையானது நடைபெற்றது மழைக்காலம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக நேற்று மாலையிலிருந்து இரவு முழுவதும் சந்தைக்கு ஆடுகளானது விற்பனைக்கு வந்தது.

சேலம் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி தேனி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் சந்தையில் ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர்.

ஒரு ஆட்டின் விலை 5000 முதல் 15000 வரை ஆடுகளானது விற்பனையானது மொத்தமாக 5 கோடி பேருக்கு மேல் ஆடுகளானது விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் வியாபாரிகள் கொண்டுவரும் ஆடுகளுக்கு ரசீது கொடுக்கப்பட்டு அதில் ஆடுகளின் எண்ணிக்கையை குறிப்பிடாமல் தொகையை முறையாக குறிப்பிடாமல் 60 முதல் 80 வரை வரை வரம்பு மீறி வசூல் செய்யப்பட்டதாக வியாபாரிகள் ஒரு சிலர் சந்தையின் வெளியில் ஆடுகளை விற்பனை செய்த நிலையில் சந்தையை ஏலத்திற்கு எடுத்த ஒப்பந்ததாரர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் ஆடுகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காகவும் சந்தையில் ரசீது வழங்க எதற்கு அதிகம் வசூல் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் சந்தையை ஏலத்திற்கு எடுத்த ஒப்பந்ததாரர் வாதம் செய்து அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

What do you think?

ஜவுளி வியாபாரி ஆம்னி வேனில் திடீரென தீ பிடித்ததால் ஜவுளிகள் தீயில் எரிந்து நாசம்

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு