in

ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வருடாபிஷேக விழா

ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வருடாபிஷேக விழா

 

திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை ஓம் ஸ்ரீ ஞான செல்வ கணபதி ஓம் ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வருடாபிஷேக விழா வேத மந்திரங்கள் முழங்க கோமாதாவிற்கு சிறப்பு பூஜைகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டையில் அமைந்துள்ள ஓம் சி செல்வகணபதி மற்றும் ஓம் ஸ்ரீ ஞான தண்டபாணி சுவாமி திருக்கோயில் ஆனது அமைந்துள்ளது.

இந்த கோயிலின் வருடாபிஷேக விழாவானது 14.12.25 அன்று மங்கள வாத்தியங்கள் முழங்க கிராம தெய்வங்களுக்கு கனி வைத்து அனுமதி பெற்று தீர்த்த அழைப்புகள் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம்,வர்ண வழிபாடு, செல்வகணபதி மற்றும் தண்டாயுதபாணி சுவாமிகளுக்கு திருக்குடத்திற்குள் எழுந்தருள் செல்தல் நிகழ்வு வேதிகா அர்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை புரோகிதர் பாலாஜி தலைமையில் அக்னி குண்டம் வளர்த்து வேத மந்திர நிகழ்வானது நடைபெற்று மகா பூரண ஹீதி மகா தீபார்தனையானது கோமாதாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடானது நடைபெற்றது.

இந்த வருடாபிஷேக விழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக சான்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்

நாலு பேரையும் ஒரே படத்துல காட்டணும்னு ஆசை