in

ஜிகே மூப்பனார் 24 ஆம் ஆண்டு நினைவு நாள்

ஜிகே மூப்பனார் 24 ஆம் ஆண்டு நினைவு நாள்

 

பாபநாசத்தில் ஜிகே மூப்பனார் 24 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு வேஷ்டி சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…..

மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரமூப்பனார் பங்கேற்பு…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் தஞ்சை மேற்கு மாவட்டம் சார்பில் மறைந்த ஜி.கே.மூப்பனார் 24 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வேஷ்டி சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சந்திரசேகர் மூப்பனார் கலந்து கொண்டு 200 கற்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு வேஷ்டி சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பாபநாசம் தெற்கு வட்டாரத் தலைவர் சேதுராமன், மாவட்ட துணை தலைவர் மாஸ்கோ, பாபநாசம் வடக்கு வட்டார தலைவர் விவேக், நகர தலைவர் பக்ரூதீன் அலி அகமது மற்றும் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள்

நாமக்கல் சேந்தமங்கலத்தில் கருட பஞ்சமி விழா