கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு நெய் காணிக்கை மையம் திறப்பு…
ஒரு கிலோ 250 ரூபாய், அரை கிலோ 150 ரூபாய் என நெய் காணிக்கை செலுத்தி வரும் பக்தர்கள்…..
பஞ்சபூதி ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்து நாட்கள் காலை மற்றும் இரவு வேலைகளில் சாமி விதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நாளான டிசம்பர் 3ம் தேதி கோயில் கருவரை முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணியளவில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்த தீபமானது 11 நாட்கள் காட்சி தரும். மேலும் தீபக் கொப்பரைக்கு ஆயிரம் மீட்டர் காடா திரியும், 4500 கிலோ நெய்யும் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கோயில் நிர்வாக சார்பில் அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே நெய் காணிக்கை மையம் திறக்கப்பட்டது.
இதில் ஆர்வமாக பக்தர்கள் நேர்த்திக் கடனாக நெய் காணிக்கை செலுத்தி வருகிறனர். ஆவின் நிர்வாக மூலமாக 4500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ நெய் 250, அரை கிலோ நெய் 150, கால் கிலோ நெய் 80 பணம் பெறப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்படுகிறது.

மேலும் இந்த தீபமை ஆனது மார்கழி மாசத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜர் பெருமானுக்கு நெற்றியில் திலகமிட்ட பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.


