இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தயாரிக்கபடும் விநாயகர் சிலைகள்
குறிஞ்சிப்பாடி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தயாரிக்கபடும் விநாயகர் சிலைகள்…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீர் நிலைகள் மற்றும் இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத வகையில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் கிராமத்தில் மண்மாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகளில் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு துறை வழிகாட்டுதல்கள் படி இரசாயன கலப்படம் இல்லாத வகையில் பேப்பர் கூழ் மூலமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கபட்டு வருகிறது
மேலும் இந்த வகையில் தயாரிக்கபடும் விநாயகர் சிலைகளுக்கு வாட்டர் கலர் எனப்படும் இரசாயனம் அல்லாத வர்ணம் பூச்சுகள் மூலம் விநாயகர் சிலைகள் தயாரிக்கபடுவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தரப்பில் கூறபடுகிறது.
மேலும் இங்கு தயாரிக்கபடும் விநாயகர் சிலைகள் ஓரு அடி முதல் பத்து அடி உயரம் வரையில் தயாரிக்க படுவதாகவும், இத்தகைய விநாயகர் சிலைகள் ஆயிரம் ரூபாய் முதல் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வரை விலை வைத்து விற்க்கபடுவதாகவும் கூறபடுகிறது.
வீட்டில் வைத்து வழபாடுகள் மேற்கொள்ளபடுவதற்கு ஏதுவாக களிமண்ணாலும் விநாயகர் சிலைகள் தயார் செய்யபட்டு வருகிறது.

இத்தகைய விநாயகர் சிலைகள் அரை அடி உயரம் முதல் இரண்டு அடி உயரம் வரையிலான சிலைகள் தயாரிக்க படுவதாகவும், இந்த வகை விநாயகர் சிலைகள் ஐம்பது ரூபாய் முதல் இருநூற்று ஐம்பது ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் தரப்பில் கூறபடுகிறது.


