கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவசமாக தக்காளிகள் வழங்கப்பட்டது
முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் முதல் உழவர் சந்தையான மதுரை அண்ணா நகர் உழவர் சந்தையில் பொது மக்களுக்கு இலவசமாக தக்காளிகள் வழங்கப்பட்டது.
ஏழை எளிய மக்களும் விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் உழவர் சந்தை என்னும் திட்டம் தொடங்கப்பட்டது.
கடந்த 14.11.1999 ம் ஆண்டு மதுரை அண்ணா நகரில் தமிழகத்தில் முதல் உழவர் சந்தை துவங்கப்பட்டு இன்றளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாநிலத்தின் முதல் உழவர் சந்தையான அண்ணா நகர் உழவர் சந்தையில் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு உழவர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கப்பட்டது. அத்துடன் இனிப்புகள் மற்றும் விதை பந்துகள் வழங்கப்பட்டன.

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு மாநிலத்தில் அவர் திறந்து வைத்த முதல் உழவர் சந்தையில் அவரது நினைவுகளை எடுத்துரைக்கும் வகைகள் இலவசத்தை பந்துகள் இனிப்புகள் வழங்கி கலைஞரின் பிறந்த நாளை அனுசரித்த திமுகவினர்.


