in

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பிரியாணி – பொது மக்களுக்கு ஐந்து ரூபாய்க்கு பிரியாணி

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பிரியாணி, பொது மக்களுக்கு ஐந்து ரூபாய்க்கு பிரியாணி

தேனியில் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரின் புதிய கடையின் திறப்பு விழா சலுகையால் பொதுமக்கள் கூட்டம் திரைப்பட காமெடி நடிகர் கிங் காங் கலந்து கொண்டு கடையினை திறந்து வைத்தார்

தேனி மாவட்டம் சின்னமனூரில் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான காளிதாஸ் என்பவர் அஜித்தின் படம் பெயரில் “வீரம் ரெஸ்டாரன்ட் அண்ட் பேக்கரி” என்ற புதிய கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது


இதில் திரைப்பட காமெடி நடிகர் கிங்காங் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய கடையினை திறந்து வைத்தார் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் தேனியை சேர்ந்த யூடியூபர்கள் மற்றும் நடிகர் அஜித்தை போல் உருவம் கொண்ட நபர் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

திறப்பு விழா சலுகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது மேலும் பொது மக்களுக்கு ஐந்து ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படுவதால் அதற்கான டோக்கன்களை வாங்க பொதுமக்கள் முந்தி அடித்துக் கொண்டு பெற்றுச் சென்றனர்

மேலும் இந்த கடையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள்தோறும் டீ ஐந்து ரூபாய் விற்பனை செய்யப்படும் என கடையின் உரிமையாளர் வீரம் காளிதாஸ் தெரிவித்தார்  திறப்பு விழாவிற்கு வருகை தந்த நடிகர் கிங்காங் உடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

What do you think?

மதுரை தியேட்டரில் பரபரப்பு! ‘பராசக்தி’ பேனரைக் கிழித்த விஜய் ரசிகர்கள்..! உச்சக்கட்ட மோதல்!

போதை கலாச்சாரத்தை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும். சிறுவர்கள் கையில் கத்தி எடுத்துக் கொண்டு ரீல்ஸ் போடுவதை பார்த்தால் வருத்தமாக உள்ளது சிஆர்.சரஸ்வதி பேட்டி