பெண் இயக்குநரிடம் அவமரியாதை: முன்னாள் எம்.எல்.ஏ குஞ்சு முகமது அதிரடி கைது!
கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு ஷாக்கிங் நியூஸ் இது.
திருவனந்தபுரத்துல நடக்கவிருக்கும் 30-வது சர்வதேச திரைப்பட விழாவுக்கான (IFFK) ஆலோசனைக் கூட்டம் ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நடந்துச்சு.
இந்தக் கூட்டத்துல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வும், இயக்குநருமான பி.டி.குஞ்சு முகமது கலந்துகிட்டாரு.
அங்க இருந்த ஒரு பெண் இயக்குநரிடம் அவர் பெண்மையை இழிவுபடுத்தும் வகையிலும், அநாகரீகமாகவும் நடந்துகிட்டதா சொல்லப்படுது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இயக்குநர், இதுபத்தி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தைரியமா புகார் கொடுத்தாங்க.
புகாரை விசாரிச்ச திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார், குஞ்சு முகமது மேல வழக்குப்பதிவு செஞ்சாங்க.
நேத்து (செவ்வாய்க்கிழமை) கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன்ல குஞ்சு முகமது ஆஜரானாரு. அ
வர் ஏற்கனவே நீதிமன்றத்துல முன்ஜாமீன் வாங்கி இருந்ததால, போலீஸ்காரங்க அவரோட கைதை முறைப்படி பதிவு செஞ்சுட்டு, அப்புறமா ஜாமீன்ல விடுவிச்சுட்டாங்க.
சினிமா அக்காடமி நிர்வாகிகள் முன்னாடியே இப்படி ஒரு சம்பவம் நடந்தது கேரளா சினிமா வட்டாரத்துல பெரிய பேச்சாகியிருக்கு.


