in

மதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார்

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்த பின் செய்தியாளர் சந்தித்து பேசுகையில்

அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு எங்கள் முதலமைச்சர் முறையாக நடவடிக்கை எடுத்து சிபிஐ – க்கு உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ க்கு உத்தரவிட்டு “யார் அந்த சார்” என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளோம்.

திமுக அரசாங்கம் எந்த ஒரு சம்பவத்திற்கும் உத்தரவிடுவது கிடையாது.திமுக தான் யார் அந்த சாரி என்பதை சொல்ல மறுக்கின்றனர்.இந்து முன்னணி நடத்தும் முருகன் மாநாட்டில் E.P.S உத்தரவிட்டால் நாங்கள் பங்கேற்போம்.திருமாவளவன் – வைகைச் செல்வம் சந்திப்பு ஒரு அரசியல் பண்பாடு.திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று யார் சொல்கிறார்கள்? கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லையே. ஏன் வலுவாக உள்ளதாக என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்?

முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு செல்வாக்கு உள்ளது. சாலையில் சென்றால் கூட்டம் கூடுகிறது. அப்படி இருக்கும்போது எங்கள் கூட்டணி STRONG காக உள்ளது என்று ஏன் சொல்ல வேண்டும். அவங்களுக்கு தன் பயம் இருப்பதால் தான் சொல்கிறார்கள்.
என்ன கூட்டணி இருந்தாலும் மக்கள் தான் எஜமானர்கள்.அதிமுக தலைமையில் தான் ஆட்சி என்று அமித்ஷா, நயினார் நாகேந்திரன் சொல்லிவிட்டார்கள்.

விஜய் அதிமுக கூட்டணிக்கு வராதது வருத்தமளிக்கிறதா?

மக்கள் தான் கூட்டணி, மக்களோடு கூட்டணி தான் நாங்கள் வைத்துள்ளோம்.தேர்தல் நெருங்கும் போது தான் சொல்ல முடியும்.
அமைச்சர் மூர்த்தி அவருடைய பாக்கெட்டில் இருந்தா கொடுக்கிறார்கள். மேற்கு தொகுதி மக்கள் இதன் மூலம் பயன்டைகிறார்களா தானே?
சின்ன கேரியர் கொடுப்பதாக சொல்கிறார்கள். பெரிய ஹாட் பாக்ஸ் ஆக கொடுங்கள்”என்றார்.

What do you think?

ஆனி மாத பிறப்பை ஒட்டி நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை

மதுரையில் விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள கிரஷர் குவாரிக்கு தடை விதிக்க கோரி கண்ணீர்மல்க புகார் மனு.