நடிகர் ஸ்ரீகாந்த்..தை பற்றி பகீர் தகவலை கொடுத்த முன்னால் மேனேஜர்
நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்று கைதான நிலையில் அவருக்கு ஒரு காலத்தில் மேனேஜராக இருந்த பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ஸ்ரீகாந்த் பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் .
ஸ்ரீகாந்த் கைதானவுடன் பலர் அந்தணன்…னிடம் அவரைப் பற்றிய கூறுங்கள் என்று கேட்க அவரும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்த ஸ்ரீகாந்த்…க்கு முதல் படமே மாபெரும் வெற்றி. வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்த ஸ்ரீகாந்த் அதன்பிறகு தோல்வியை சந்திக்க தொடங்கினார்.
ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த நடிகர் ஸ்ரீகாந்த் திரைத்துறைக்கு வந்திருக்கக் கூடாது ஆரம்ப காலத்தில் அவரைப் பற்றி வெளியான கிசுகிசுக்களை பார்த்து அவரது பெற்றோர்கள் வருத்தப்பட்டு என்னப்பா இப்படி எல்லாம் எழுதுறாங்களே என்று கேட்பார்கள் நடிகராக இருந்து விட்டால் இதெல்லாம் சந்தித்து தான் ஆக வேண்டும். இதெல்லாம் சாதாரணம் என்று நான் கூறுவேன் .
ரோஜா கூட்டம் படம் வெளியாகி வெற்றி பெற்ற பொழுது புதிதாக லேன்சர் கார் வாங்கி தனது நண்பருடன் சென்னை முழுவதும் நல்இரவில் சுற்றினார் அப்பொழுது ஒரு நபர் குறுக்கே வர அவரை இடித்து விடக்கூடாது என்று இளையராஜா ஸ்டூடியோ அருகே இருந்த மின்கம்பத்தை இடித்து மறுபுறம் இருந்த பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் பக்கத்தில் போய் நின்றது கார்.
நல்லவேளை யாருக்கும் எதுவும் ஆகவில்லை இல்லையென்றால் அப்பொழுதே எட்டு பேரை ஸ்ரீகாந்த் காலி செய்து இருப்பார். அதன் பிறகு மீண்டும் ஒரு பெரிய கார் விபத்தில் அடிபட்டு உதடு கிழிந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார் நல்ல குடும்பத்தில் பிறந்த ஸ்ரீகாந்த் தகாத நண்பர்களுடன் சேர்ந்து தற்போது இப்படி ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்.
இந்த விஷயம் அவரை விட அவரது பெற்றோர்களை தான் அதிகம் பாதிக்கும். சில வருடங்களுக்கு முன்பாக நான் ஸ்ரீகாந்த்தின் தந்தை..யை சந்தித்தேன் அப்போது அவர் திருப்பதி பக்கத்திலேயே ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி கூடியிருப்பதாக சொன்னார்.
வீட்டில் இருந்தே ஏழுமலையா…னை தரிசுக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார். பொதுவாகவே தவறான விஷயங்களை செய்து பிரபலங்கள் மாட்டிக்கொண்டால் அவர்களை காப்பாற்ற தயாரிப்பாளர்களோ இயக்குனர்களோ அல்லது நண்பர்களோ முயற்சி செய்வார்கள் ஆனால் ஸ்ரீகாந்த் விஷயத்தில் யாருமே அவருக்கு கை கொடுக்கவில்லை.
செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அப்படியே விட்டு விட்டனர். இந்த வழக்கில் பிரதீப் முதல் குற்றவாளியாகவும் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஜான் இரண்டாவது குற்றவாளியாகவும் ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
நல்ல நண்பர்கள் முட்டாள் தனமான எந்த காரியத்தையும் செய்ய விடமாட்டார்கள். நல்ல நண்பர்கள் எதிர்பார்க்கும் போது கிடைக்கவும் மாட்டார்கள்.