in

சுவாமிமலை சுவாமிநாதர் திருக்கோவிலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்

சுவாமிமலை சுவாமிநாதர் திருக்கோவிலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்

கும்பகோணம் அருகேயுள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்.

இது பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயிலாகும் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதது இத்தலம் எனவே இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமும் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாததரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது .

இந்த சுவாமிமலை திருத்தலம்.இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கோவில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சுவாமி தரிசனம் செய்தார் ‌ தொடர்ந்து ஸ்ரீ தேவசேனாதிபதி ஸ்பாதி 28 அடி உயரம், 21 அடி அகலம், 18 டன் எடை கொண்ட நடராஜர் சிலை செய்த சிற்ப கூடத்திற்கு அண்ணாமலை சென்றார். புதிய சிலை செய்வதற்காக சென்றிருக்கலாமென்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

What do you think?

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் தைப்பூச தேர்த்திருவிழா

குடிநீர் வசதி முதல் சுடுகாடு வசதி வரை அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து கோரி ஆர்ப்பாட்டம்