in

கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்

கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்

 

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

கும்பகோணம் அருகே கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்த மாநில அணைகளிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையை வந்தடைந்த இந்த உபரி நீர் வினாடிக்கு 1,10,500 பெருமளவு முக்கொம்பில் இருந்தும், கல்லணையில் இருந்தும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இதனால் கும்பகோணம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நீர் அதிகளவு நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், உத்தரவின் படி பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சிக்குட்பட்ட கொள்ளிட கரையோர கிராமங்களான பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் துணிகள் துவைப்பதற்கு குளிப்பதற்காக ஆற்றில் இறங்க கூடாது என்றும், கால்நடைகளை குளிப்பாட்டுவோ, மேய்ச்சலுக்கோ ஓட்டிச் செல்லவோ கூடாது, ஆற்றில் மீன் பிடிப்பது, செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

What do you think?

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தை வழங்காத தமிழக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் எதிரே தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டம்

குடிநீர் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்