20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொடிமரம் நடும் விழா
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொடிமரம் நடும் விழா அமைச்சர் கே என் நேரு பங்கேற்பு.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏரி காத்த ராமர் கோவில் உள்ளது.
இந்த கோவிலை தமிழக அரசின் அறநிலையத்துறை ஏற்பாட்டில் குடமுழக்கு விழா செய்ய கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் குடமுழுக்கு விழா ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
அதன் தொடர்ச்சியாக கோயிலின் உட்பிரகாரத்தில் கோபுரம் எதிரே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 அடி கொண்ட உயரம் கொண்ட கொடி மரம் நடும் விழா இன்று நடைபெற்றது.
இதில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K N நேரு கலந்துகொண்டு கொடி மரத்துக்கு பூஜை செய்து பின்னர் கிரேன் உதவியுடன் கொடிமரம் நடப்பட்டது.
பின்பு கோவில் உள்ள ஸ்ரீ ஏரியா காத்த ராமர் சுவாமியை மனம் உருகி தரிசனம் செய்தார்.

கோவில் அர்ச்சகர்கள் அமைச்சருக்கு மாலை மரியாதை பிரசாதமும் மந்திரங்கள் ஓத மரியாதை செய்யப்பட்டது.


