in ,

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம். வருகிற ஜூலை 1ஆம் தேதி தேரோட்டமும், மறுநாள் 2 ஆம் தேதி ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவும் நடைபெற உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் இருமுறை திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படும். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆ௹த்ரா தரிசன விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன திருவிழாவிற்கான உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் வேத மந்திரங்கள் உச்சரிக்க, மேள தாள வாத்தியங்கள் முழங்க உத்சவ ஆச்சாரியார் சிவகைலாஸ் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். பின்னர் கொடி மரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது. காலை, மாலை இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் 4 மாட வீதிகளையும் உலா வரும். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற ஜூலை 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது.

அன்று நடராஜர் கோயிலின் மூலவரான நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர் சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வலம் வரும்.

அன்று இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற ஜூலை 2ஆம் தேதி புதன்கிழமை ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது. அன்று நடராஜர், சிவகாமசுந்தரி பல்வேறு பூஜைகள், ஆராதனைகளுக்கு பிறகு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து சித்சபை எனப்படும் கருவறைக்கு செல்லும். அப்போது ஆனந்த நடனமாடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

தேரோட்டம் மற்றும் ஆனி திருமஞ்சன திருவிழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். புகழ்பெற்ற இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

What do you think?

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம்

சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு