in

புனித செபஸ்தியார் ஆலயத்தின் 151 -வது ஆண்டு திருவிழா கொடியேற்றம்

புனித செபஸ்தியார் ஆலயத்தின் 151 -வது ஆண்டு திருவிழா கொடியேற்றம்

 

காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தின் 151 -வது ஆண்டு திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வான வருகின்ற மே-03-ஆம் தேதி ஐந்து பெரிய தேர் பவனி நடைபெற உள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தின் 151 – வது ஆண்டுத் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக கொடிமரத்திற்க்கு சிறப்பு திருப்பலியினை புனித தூய தேற்றரவு அன்னை ஆலய பங்குதந்தை பால்ராஜ் குமார் மற்றும் உதவி பங்கு தந்தை சாமிநாதன் செல்வம் ஆகியோர் சிறப்பாக நடத்தி வைத்தனர்.

அதனை தொடர்ந்து கொடியேற்ற வைபவத்தையும் நடத்தி வைத்தார். முன்னதாக மந்திரிக்கப்பட்டு பின்னர் செபஸ்தியார் உருவம் தாங்கிய கொடியினை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

9 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மூன்று பெரிய தேர் பவனி மே 02 ஆம் தேதியும், அதை தொடர்ந்து 03-ஆம் தேதி அன்று ஐந்து பெரிய தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

மேலும் இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான கிரிஸ்தவர்கள் கலந்து கொண்டு புனித செபஸ்தியாரை வழிபட்டனர்.

What do you think?

Retro

தஞ்சை பெருவுடையார் கோயில் சித்திரை மாதம் பிரதோஷம்