கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவரின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிதி உதவி வழங்க கோரி பாம்பனில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்
பாம்பன் சின்ன பாலம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கடலில் தவறி விழுந்து சின்ன பாலத்தை சேர்ந்த மீனவர் சரத்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பெரிய தாளை பகுதியை சேர்ந்த மீனவர் டைசன் ஆகிய இரண்டு மீனவர்கலும் மாயமான நிலையில் நேற்று சரத்குமார் உடல் இறந்த நிலையில் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திருட்டு பகுதியில் மீட்கப்பட்டது.

மேலும் மற்றொரு மீனவர் டைசன் தற்போது வரை கிடைக்காதால் அவரை உடனடியாக தேடி கண்டுபிடிக்க வேண்டும், கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் சரத்குமார் மனைவிக்கு அரசு வேலை வழங்குவதுடன், ரூ. 20 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி
மீனவர்கள் பாம்பன் சின்ன பாலம், புது தெரு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் பாம்பன் பேருந்து நிலையம் முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய காட்சியை நம்மால் காண முடிகிறது மேலும் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களுமே ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பும் நிலவி வருகிறது


