மீனவர்கள் கொண்டாடும் படகு பொங்கல் விழா, படகுகளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு குடும்பத்துடன் கடலில் உலா வந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்
தமிழகம் முழுவதும் தை 2ம் நாள் அன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது, இந்த மாட்டு பொங்கலை உழவர்கள் மட்டுமில்லாமல் மீனவர்களும் கொண்டாடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் உழவர்கள் எவ்வாறு மாடுகளை அலங்கரித்து படையலிட்டு மாடுகளை விரட்டி மாட்டு பொங்கலை கொண்டாடி வருவதுபோல் .
திருமுல்லைவாசல் மீனவ கிராம மீனவர்கள் தங்களிடம் உள்ள விசைபடகு மற்றும் 500 க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை சுத்தம் செய்து சந்தனம் குங்கும் வைத்து படகுகலில் கரும்பு மற்றும் வாழை மரங்கலை கட்டி அலங்கரித்து பொங்கல் வைத்து கடற்கரையோரம் படைத்து தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கடலில் உலா வந்து மகிச்சியுடன் பொங்களை கொண்டாடினர்.


