வாகன ஓட்டுனர்களுக்கு முதலுதவிக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்
வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணியரசன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் சூரியநாராயண மூர்த்தி கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சி.சி.சி நர்சிங் கல்லூரி சார்பாக இன்று வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்திருந்த ஓட்டுநர்கள் அனைவருக்கும் விபத்தின் போது எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதன் அவசியத்தை செய்முறையாக செய்து காண்பித்தனர் இதில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


