இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த தந்தை மகன்
ராஜபாளையத்தில் வாகன ஓட்டுனருடன் ஏற்பட்ட தகராறில் உரிமையாளர் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகனை வலை வீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரத்தை சேர்ந்த திருப்பதி சீனிவாசன் என்பவரிடம் வேலை பார்த்த முத்துகிருஷ்ணன் என்பவர் குட்டி யானை வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது எதிரே வந்த அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஓட்டுனரிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக கண்மாய் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பதி சீனிவாசன் என்பவரது இருசக்கர வாகனத்தை மாரிமுத்துவம், அவரது தந்தை பெருமாள் சாமியும் தீ வைத்து எரித்துள்ளனர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் பேரில் கீழ ராஜகுலராமன் காவல்துறையினர் பெருமாள் சாமியை கைது செய்து, தப்பி ஓடிய மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.