in

திருவாடனையில் காலை முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாடனையில் காலை முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் அளவிற்கு நெல் விளைவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக விவசாயிகள் நெல் விதைத்து பயிர் முளைத்து மழைக்காக காத்திருந்த நிலையில்  இன்று காலை முதல் தற்போது ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது.

இந்த மழை விவசாயத்துக்கு ஏற்ற மழை எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். குளிர்ச்சியான சூழல் நிலவத் தொடங்கியது. திடீரென  பெய்த மழையால் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு சிரமப்பட்டனர். பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கல் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

What do you think?

மயிலாடுதுறையில் தமிழர் திருநாள் திராவிட பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது