in

வேப்பூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

வேப்பூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ரெட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (58). இவர் தனது சகோதரர் மணிகண்டனின் விவசாய நிலத்தில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், மணிகண்டனின் நிலத்திற்கு அருகே உள்ள கீழ்ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து என்பவரது நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில், விதிகளுக்குப் புறம்பாக நேரடியாக மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அறியாமல் நேற்று வயல்வெளி வழியாக நடந்து சென்ற கிருஷ்ணன், எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்து வந்த சிறுபாக்கம் போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விளைநிலங்களில் வனவிலங்குகளை விரட்ட சோலார் மின்வேலி அமைக்க மட்டுமே அனுமதியுள்ள நிலையில், அதனுடன் கூடுதல் மின்சாரத்தை இணைத்து மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் தொடர்கதையாகி வருகின்றன.

மின்சாரத் துறை அதிகாரிகள் கிராமப்புறங்களில் உள்ள விளைநிலங்களில் முறையான ஆய்வு மேற்கொள்ளாததே இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

சோலார் வேலிகளில் மின்சாரம் பாய்ச்சுவதை மின்சாரத் துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதும், அப்பாவி உயிர்கள் பறிபோவதைத் தடுக்க அதிகாரிகள் இனியாவது விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

What do you think?

மாஞ்சோலைத் வசிக்கும் தொழிலாளர்களுக்குத்அடிப்படை வசதிகள் குறித்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் நேரில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.

பண்ருட்டி அருகே பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது