ரசிகர்கள் முட்டாள் அல்ல
சேரன் இயக்கிய “ஆட்டோகிராஃப்” என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படயுள்ளது.
படத்தின் 21வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக Re-release ஆகிறது.
பிப்ரவரி 2004 இல் ஆட்டோகிராஃப்” வெளியிடப்பட்டது. இந்தப் படம் ஒரு மனிதனின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் முறிந்து போன பள்ளி காதலையும் அழகாகச் சித்தரிக்கிறது.
இந்த திரைப்படம், பிரான்சில் நடந்த லியோன் ஆசிய திரைப்பட விழா மற்றும் கனடாவில் நடந்த மாண்ட்ரீல் உலக திரைப்பட விழா போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.
கூடுதலாக, “ஆட்டோகிராஃப்” என்ற தமிழ் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட “நா ஆட்டோகிராஃப்” என்ற தெலுங்கு திரைப்படமும் மீண்டும் வெளியிடப்படுகிறது.
“நா ஆட்டோகிராஃப்” ஏப்ரல் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சேரனின் ஆட்டோகிராப் ரிலீஸ் Trailer … AI டெக்னாலஜி மூலம் அண்மையில் வெளியிடப்பட்டது.
இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களாக ஓடிய ஆட்டோகிராப் தற்பொழுது 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 2 மணி நேரம் 30 நிமிடமாக மாற்றப்பட்டிருக்கிறது.
மேலும் டிஜிட்டலைஸ் முறையில் ரீ-வொர்க் செய்யப்பட்டிருக்கிறது இது குறித்து சேரன் குறிப்பிடுகையில் இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி ஆட்டோகிராப் தயாராகி வருகிறது.
சிரமம் பார்க்காமல் நாங்கள் உழைத்ததற்கு காரணம் ரசிகர்கள் முட்டாள் இல்லை அவர்களை ஏமாற்றினால் அது பிடிக்காது எனவே நாமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


